புதன், 1 ஏப்ரல், 2015

அவசிய தெளிவு

எல்லா பாதைகளும் ஒரே இடம் சேர்வதில்லை
எல்லா மதங்களும் ஒன்றையே  போதிக்கவில்லை

எல்லா பழைய நூல்களும் உண்மை சொல்வதில்லை

சனி, 21 மார்ச், 2015

தாலி

மறைந்திருந்து அறுப்பர் திருடர்
உடனிருந்து அறுப்பர் துரோகியர்

தேதி சொல்லி அறுப்பர் திராவிடர் 

வியாழன், 5 மார்ச், 2015

தமிழ் பிரச்னை

அண்டை நாட்டு பிரச்னையில்
சாய பக்கம் தேர்வு செய்ய
தமிழும் தொப்புள்கொடியும்

மாநிலங்கள் இடை பிரச்னையில்
நாட்டுப்பற்றை விட்டுத்தள்ள
தமிழும் செம்மொழியும்

சாதிகள் இடை பிரச்னையில்
பந்தங்களை அறுத்தெறிய
தமிழும் ஆண்ட பொய்களும்

ஊரெல்லாம் தம்பட்டமிட்டு
காதலை தெருவில் விற்க
தமிழும் காதலும் வீரமும்

ஆர்வக்கோளாறால் துடிப்பவரை
ஏய்த்து அனைத்தும் பிடுங்கிடவே
தமிழும் உணர்வும் தேசியமும்

இதை நம்பி ஊறி வளர்ந்து பிழைத்து
விழுந்து நாறி எழ கேட்கும் பதில்
தமிழுக்கும் தனிவாழ்வுக்கும் என்ன இருக்கு

திங்கள், 16 பிப்ரவரி, 2015

காதல்

காதலை விரும்பும் மனிதரை புரிகிறது
காதலை வெறுக்கும் மனிதரை ஏற்கிறது

காமமில்லா காதல் என்போர் எவ்வினம்  

புதன், 28 ஜனவரி, 2015

எரிதம்

எல்லோர் முகப்பையும் அசிங்கம் செய்யும் 
என்னவென்று தெரியாமலே பகிரும் ஆர்வம் 

முகநூலே புரியவில்லை வாழ்க்கை புரியுமா

வெள்ளி, 16 ஜனவரி, 2015

தமிழ் வளர்ப்போர்


தூர வடக்கு மாநிலத்திலிருந்து வந்து 
தமிழும் வள்ளுவமும் வளர்க்க 

அண்டை வடமாநில தமிழ் வளர்ப்போர்க்கு வருத்தம் 

வெள்ளி, 9 ஜனவரி, 2015

வெருளி எரிக்கும் அறிவு

அனைத்து சாதி பிரச்னைகளுக்கும் ஒரு சாதியே காரணம்
அந்நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒருவனே காரணம்

வல்லோனுக்கஞ்சி வைக்கோல் வெருளி எரித்து மகிழும் அறிவு