செவ்வாய், 20 ஜனவரி, 2009

காத்திருத்தல்

கால் கடுக்க வழி பார்த்து காத்திருந்தேன் முன்பு
கால் பார்த்து வழியிலே காத்திருந்தேன் பின்பு
காத்திருத்தலே வழியாகி நின்றேன் இன்று

உள்ளே வெளியே

கூட்டத்தில் இருக்கையில் கூட்டத்தை வெறுத்து
தனிமையில் இருக்கையில் தனிமையை வெறுத்து
வெறுப்பு உள்ளிருக்க உணர்வு வெளியிருக்க

கூட்டத்தில் இருக்கையில் கூட்டத்துடன் பேசி
தனிமையில் இருக்கையில் தனக்குள் பேசி
பேச்சு உள்ளிருக்க கருத்து வெளியிருக்க

கூட்டத்தில் இருக்கையில் தனிமைக்கு ஏங்கி
தனிமையில் இருக்கையில் கூட்டத்திற்கு ஏங்கி
ஏக்கம் உள்ளிருக்க எண்ணம் வெளியிருக்க

கூட்டத்தில் இருக்கையில் கூட்டத்தில் களித்து
தனிமையில் இருக்கையில் தனிமையில் களித்து
மூத்தோன் உள்ளிருக்க இளையோன் வெளியிருக்க