செவ்வாய், 9 செப்டம்பர், 2014

வண்ணமீன் இறப்பு

இறந்து மிதக்குது 
என் வீட்டில்  
மீன் தொட்டியில்

அதிக விலை கொடுத்து வாங்கியது 
அழகாக இருப்பதாக பலர் சொன்னது 

ஏனோ
சிலநாட்களாக
நிம்மதியின்றி இருந்தது
ஏனைய மீன்களை விரட்டியது

விரட்டியதை பார்த்தபோது
கொதித்தது மனம்

விறைத்திருப்பதை பார்க்கும்போது
உடையுது மனம்

மனம்
அந்த மீன்போல
ஒரேமாதிரி இருந்ததில்லை
ஒருநாள் இறந்திடுமோ

சரியா தவறா
விரட்டும் மீன் இறக்கவென்று சபித்தது
சாபம் பலித்ததென்று சற்று மகிழ்ந்தது
அறியாத மீனை வாங்கி வளர்த்தது
இறந்த மீனில் ஞானம் தேடுவது