வியாழன், 22 ஏப்ரல், 2010

இறுதி நிமிடங்கள்

இந்த உலகும் அலுத்துவிட்டது
இந்த வாழ்வும் அலுத்துவிட்டது
இன்னும் சில நிமிடம் தான்
இனி இவை இருக்காது 

எத்தனை அண்டையன்பர் நண்பர்
என்முகம் பாராதபோதும் எப்போதும்
என்சொல் அறிவார் அவர்
எனினும் இவ்வுலகம் அலுத்துவிட்டது

எத்தனை வயல் தோப்பு கால்நடை
எப்போதும் அன்பர்க்கு உணவுபடைக்குமிடம்
எனக்கென தனித்தீவுகளும் உண்டு
எனினும் இவ்வாழ்வு அலுத்துவிட்டது 

எத்தனை குழப்பம் அத்தனை தெளிவு 
எவர்க்கு என்சொல்வேன் கடைசி வார்த்தை 
எல்லாம் வேண்டாமென்றபின் எதற்கு சொல்ல 
இன்னும் சில நிமிடம் தான் 

எத்தனை முயற்சி எவ்வளவு நேரம் 
எத்தனையெத்தனை நட்புதவிகள் 
எல்லாம் வீணாய் போனாலும் 
இனி இவை இருக்காது 

முடிவெடுத்து விட்டேன் 
முதலில் சொன்னது நட்பு மகனுக்குத்தான்
முடிவு தவறென்றான் அதிர்ந்து 
மனைவிக்கு மகிழ்ச்சியோ என ஐயம் 

எவர்க்கும் சொல்லாதீர் இதை 
எனக்கென திருடும் கொல்லும் கூட்டமுமுண்டு 
என் பேஸ்புக் கணக்கை தயக்கத்துடன் முடிக்கின்றேன் 
இனி என் வாழ்வில் நிஜ மனிதர்களுக்கும் நேரமுண்டு