இந்த வாழ்வும் அலுத்துவிட்டது
இன்னும் சில நிமிடம் தான்
இனி இவை இருக்காது
என்முகம் பாராதபோதும் எப்போதும்
என்சொல் அறிவார் அவர்
எனினும் இவ்வுலகம் அலுத்துவிட்டது
எப்போதும் அன்பர்க்கு உணவுபடைக்குமிடம்
எனக்கென தனித்தீவுகளும் உண்டு
எனினும் இவ்வாழ்வு அலுத்துவிட்டது
எத்தனை குழப்பம் அத்தனை தெளிவு
எவர்க்கு என்சொல்வேன் கடைசி வார்த்தை
எல்லாம் வேண்டாமென்றபின் எதற்கு சொல்ல
இன்னும் சில நிமிடம் தான்
எத்தனை முயற்சி எவ்வளவு நேரம்
எத்தனையெத்தனை நட்புதவிகள்
எல்லாம் வீணாய் போனாலும்
இனி இவை இருக்காது
முடிவெடுத்து விட்டேன்
முதலில் சொன்னது நட்பு மகனுக்குத்தான்
முடிவு தவறென்றான் அதிர்ந்து
மனைவிக்கு மகிழ்ச்சியோ என ஐயம்
எவர்க்கும் சொல்லாதீர் இதை
எனக்கென திருடும் கொல்லும் கூட்டமுமுண்டு
என் பேஸ்புக் கணக்கை தயக்கத்துடன் முடிக்கின்றேன்
இனி என் வாழ்வில் நிஜ மனிதர்களுக்கும் நேரமுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக