கடவுள் படைக்கப்பட்ட போதே நாத்திகன் பிறந்து விட்டான்
யுகயுகமாய் அவதாரமெடுத்தபோதும்
நாத்திகத்தை அழிக்கவில்லை
ராமனும் மரியாதையாக
நாத்திக அந்தணன் என்றான்
ராமன் காட்டில் வாடும்போது
நாட்டில் நாத்திகன் வாழ்ந்திருந்தான்
ராமன் கடவுள் ஆகும்முன்னே
கடவுள் இல்லை என்றிருந்தான்
நானும் கூட சில காலம்
நாத்திகனாய் வாழ்ந்திருந்தும்
அடையாள சட்டை போட்டு
அலைந்ததில்லை ஊருக்குள்ளே
பிறமொழி நாத்திகர்கள்
பற்றி எனக்கேதும் தெரியாது
நம்மூரு நாத்திகர்களுடன்
நல்ல பழக்கமுண்டு
நாத்திகம் என்றொரு மதமுண்டு
ஆத்திகனாய் பிறந்துபின்
நாத்திகனாய் சிலகாலமேனும்
வாழாதிருப்பவன் பெற்றோரால்
மூளைசலவையாகி சிந்தியாதவனே
நாத்திகனாய் பிறந்துபின்
ஆத்திகனாய் சிலகாலமேனும்
வாழாதிருப்பவன் பெற்றோரால்
மூளைசலவையாகி சிந்தியாதவனே
மத அடையாளம் காட்டும்வண்ணம்
வண்ண ஆடை உடுத்துவார்கள்
ராமஜெயம் போல இறந்த தலைவர்
வாழ்கவென்று கூவி கூடுவார்கள்
நாத்திக மதத்தில் குருக்களுண்டு மடங்களுண்டு
உருவாக்கிய தலைவருடன் கூட
அடுத்த நிலை தலைவர்களையும்
இருந்தாலும் இறந்தாலும்
மாலையிட்டு வணங்கிடுவர்
பிறந்த இறந்த நாள்பார்த்து
கூட்டம் கூடி ஊர்வலம் போய்
ஊரூராய் திருவிழா நடத்தி
பக்தரெல்லாம் மகிழ்ந்திருப்பார்
ஊரூருக்கு மடங்களுண்டு
ஒவ்வொன்றுக்கும் தலைவருண்டு
அங்கங்கு சொத்துண்டு வசூலுண்டு
வீணாய் போகும் பக்தருண்டு
திருமணம் நடத்திவைக்க
தலைவர் வந்திருந்து அர்ச்சிப்பார்
தன்மத புனிதர்களை போற்றியும்
பிறமத புனிதர்களை தூற்றியும்
நாத்திக மதத்தில் சாதியுண்டு மதமுமுண்டு
நாத்திக மதத்திலும்
சாதிசெத்து போவதில்லை
நாத்திக நாக்குகள்
சாதி சொல்லா நாளுமில்லை
நாத்திக மதத்திலும்
உட்பிரிவுகள் பல உண்டு
உட்பிரிவுகளுக்குள் நித்தம்
சண்டைகளும் வருவதுண்டு
நாத்திக மதத்திலும்
தலைவர் சொன்னது வேதமாகும்
அதை அறிந்தால் போதும்
அனைத்தும் அறிந்தாற்போல் பேசித்திரிவதுண்டு
நாத்திக மதத்திலும்
மதத் தீவிரவாதமுண்டு
பிறரை எதிரியென நாவால் தாக்கிடுவர்
கூட்டம் கூடி உடலாலும் தாக்கிடுவர்
5 கருத்துகள்:
//நம்மூரு நாத்திகர்களுடன்
நல்ல பழக்கமுண்டு //
//பிறந்த இறந்த நாள்பார்த்து
கூட்டம் கூடி ஊர்வலம் போய்
ஊரூராய் திருவிழா நடத்தி
பக்தரெல்லாம் மகிழ்ந்திருப்பார்//
திமுக, திக இவங்களை சொல்லுரிங்க சரியா? நாத்திகம் என்றால் என்ன என்பதை அடையாளம் காட்டிய போலி நாத்திகர்கள் இவர்கள்
எனக்கு ஆத்திகம் கொஞ்சமும் நாத்திகம் கொஞ்சமும் தெரியும். சொல்லிகொள்ளும் அளவிற்கு அரசியலும் கட்சிகளும் தெரியாது.
ஆத்திகத்திலும், நாத்திகத்திலும் போலி உண்டு என்பது தெரியும். கூட்டம், வசூல் என்று ஆனால், அதை தொழிலாக கொண்டு போலிகள் வரத்தானே செய்வார்கள்.
நானும் கூட சில காலம்
நாத்திகனாய் வாழ்ந்திருந்தும்
அடையாள சட்டை போட்டு
அலைந்ததில்லை ஊருக்குள்ளே
கவிதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
சமரன் அவர்களே, ரத்னவேல் அவர்களே உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்
கருத்துரையிடுக