ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வதாக எண்ணுகிறார்
ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வை
ஆழ்ந்து அனுபவிப்பதாக
அனுபவித்து அறிந்ததாக
அறிந்து வாழ்வதாக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வில்
சரியான முடிவெடுப்பதாக
முடிவெடுப்பது பிறருக்கென
பிறருக்கு உழைப்பதாக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வின்
பாடங்களை படித்ததாக
அர்த்தம் புரிந்ததாக
இன்பக்கரை கண்டதாக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரின்
வலிகள் புரிந்தவராக
வலியின் காரணம் தெரிந்தவராக
காரணத்தின் நியாயம் உணர்ந்தவராக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவருக்கு
எது தேவை என்றறிந்தவராக
எது பாடம் என்றுணர்த்துபவராக
எது அன்பு என்று காட்டுபவராக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரால்
ஏமாற்றப்படுவதாக
துன்பப்படுவதாக
ஞானம் அடைவதாக
சிலர் மட்டும் தான் சும்மா இருந்து
எண்ணங்கள் உயர்த்துமென்றும்
எண்ணங்கள் தாழ்த்துமென்றும்
வாழ்வை மறைக்குமென்றும்
ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வை
ஆழ்ந்து அனுபவிப்பதாக
அனுபவித்து அறிந்ததாக
அறிந்து வாழ்வதாக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வில்
சரியான முடிவெடுப்பதாக
முடிவெடுப்பது பிறருக்கென
பிறருக்கு உழைப்பதாக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வின்
பாடங்களை படித்ததாக
அர்த்தம் புரிந்ததாக
இன்பக்கரை கண்டதாக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரின்
வலிகள் புரிந்தவராக
வலியின் காரணம் தெரிந்தவராக
காரணத்தின் நியாயம் உணர்ந்தவராக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவருக்கு
எது தேவை என்றறிந்தவராக
எது பாடம் என்றுணர்த்துபவராக
எது அன்பு என்று காட்டுபவராக
ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரால்
ஏமாற்றப்படுவதாக
துன்பப்படுவதாக
ஞானம் அடைவதாக
சிலர் மட்டும் தான் சும்மா இருந்து
எண்ணங்கள் உயர்த்துமென்றும்
எண்ணங்கள் தாழ்த்துமென்றும்
வாழ்வை மறைக்குமென்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக