ஒளித்திருக்கும் இருளினை உன் ஒளி கொண்டு மறைப்பேனோ
உறைந்திருக்கும் மனதினை உன்கருணை கொண்டு கறைப்பேனோ
உள்ளிருக்கும் அசுரர்களை உன்பலம் கொண்டு அழிப்பேனோ
மாறாக முன்னிருக்கும் உலகை இறைபோதை கொண்டு மறப்பேனோ
அன்பு கருணை மறந்து இங்கு ஆடவைக்கும் இறைபோதை
அண்டிவரும் உயிர்களையும் அழிக்கவைக்கும் இறைபோதை
என்வழிதான் உயர்ந்ததென்று எண்ணவைக்கும் இறைபோதை
உன்னைமறந்து உன்பெயரால் உனையழிக்கும் இறைபோதை
மெய்யென்று பொய் சொல்லி ஊரை ஏய்க்கும் இறைபோதை
அமைதி அமைதி என்று சொல்லி இரைச்சலிடும் இறைபோதை
அன்பு அன்பு என்று சொல்லி மனிதம் அழிக்கும் இறைபோதை
உந்தன் வழி என்று சொல்லி நரகம் காட்டும் இறைபோதை
எதை செய்தும் இறைந்தால் போதும் என்று சொல்லும் இறைபோதை
உன் இன்னொரு முகத்தை வெட்டிப்போடு என்று சொல்லும் இறைபோதை
இறைபோதையிடமிருந்து என்னை காக்க இறைஞ்சுகிறேன் உன்னையே


