சனி, 23 பிப்ரவரி, 2013

இறைபோதை


ஒளித்திருக்கும் இருளினை உன் ஒளி கொண்டு மறைப்பேனோ
உறைந்திருக்கும் மனதினை உன்கருணை கொண்டு கறைப்பேனோ
உள்ளிருக்கும் அசுரர்களை உன்பலம் கொண்டு அழிப்பேனோ
மாறாக முன்னிருக்கும் உலகை இறைபோதை கொண்டு  மறப்பேனோ

அன்பு கருணை மறந்து இங்கு ஆடவைக்கும் இறைபோதை
அண்டிவரும் உயிர்களையும் அழிக்கவைக்கும் இறைபோதை
என்வழிதான் உயர்ந்ததென்று எண்ணவைக்கும் இறைபோதை
உன்னைமறந்து உன்பெயரால் உனையழிக்கும் இறைபோதை

மெய்யென்று பொய் சொல்லி ஊரை ஏய்க்கும் இறைபோதை
அமைதி அமைதி என்று சொல்லி இரைச்சலிடும் இறைபோதை
அன்பு அன்பு என்று சொல்லி மனிதம் அழிக்கும் இறைபோதை
உந்தன் வழி என்று சொல்லி நரகம் காட்டும் இறைபோதை

இதுவுமில்லை அது எதுவுமில்லை  என்று சொல்லும் இறைபோதை
எதை செய்தும் இறைந்தால்  போதும் என்று சொல்லும் இறைபோதை
உன் இன்னொரு முகத்தை  வெட்டிப்போடு என்று சொல்லும்  இறைபோதை
இறைபோதையிடமிருந்து என்னை காக்க இறைஞ்சுகிறேன் உன்னையே  

கருத்துகள் இல்லை: