புதன், 20 பிப்ரவரி, 2013

கலைந்த தவம்


ஒற்றைச் சொல்லிலே ஒடுக்குமொரு தவம்
ஓய்வின்றி நானும் செய்து வந்தேன்
பெரும் சிரிப்பால் என் தவம் கலைத்தாய்
பேரண்ட ரகசியங்கள் பல சொன்னாய்

மனக்காட்சி தேடி கண்மூடும் தவம்
மனதடக்க நானும் செய்து வந்தேன்
மின்னி கண்திறக்க என் தவம் கலைத்தாய்
மனதும் நிறையும் காட்சி தந்தாய்

மாயாதத்துவம் படித்து புரியும் தவம்
மனம் குழப்பி நானும் செய்து வந்தேன்
ஒற்றைக் கேள்வியில் என் தவம் கலைத்தாய்
ஓய்வாக பதிலை தேட வைத்தாய்

தவம் கலைத்த உனக்கு சாபம் இடுவேனோ
தவம் கலைந்தது உன் வரமாக கொள்வேனோ
காட்டுவழி இனி கலங்காமல் செல்வேனோ
கண் திறந்த உன்னை குருவாக கொள்வேனோ

என் தவம் கலைத்து பின் நீ என்ன செய்கிறாய்
என்னுள்ளே அமைதியாய் தவம் செய்கிறாயோ
உன்தவம் கலைக்குமென் சொல் பார்வை எண்ணம்
உன்வழி உள்வழி மறைவழி நிறைவழி என்வழி


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// மறைவழி நிறைவழி என்வழி ///

நல்ல வழி...