ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தேடுகிறேன்


பல கணங்களாக
பல இடங்களிலே
தேடுகிறேன்
கணங்கள் யுகங்களாக
இடங்கள் உலகங்களாக

தீண்டிய தென்றலை
தோன்றிய காட்சியினை 
தேடுகிறேன்
தென்றலே நினைவாக
காட்சியே வரமாக

கண்டு மறந்த கண்களை
கலங்கி  தெரிந்த நிலவினை
தேடுகிறேன்
கண்களே புதிராக
நிலவே கவிதையாக

அந்தக்கணத்தில் பிறந்தேனா
தொலைந்தேனா தொலைத்தேனா
அந்த இடத்தில் இறந்தேனா
தேடினேனே தேடினாரே 

தென்றலும் நானும் நகர
தீண்டியதா தீண்டினேனா
காட்சியின் அரங்கேற்றம்
அண்டத்திலா பிண்டத்திலா

புதிரின்றும் புதிர்தானா
என்றுமே விளங்காதா
கவிதையே கேள்வியாக
கவிதையே பதில்தர

கருத்துகள் இல்லை: