நான் கேட்டா நீ தந்தாய்
நீயாக தான் தந்தாய்
உயிர் தந்தாய் உடல் தந்தாய்
உணர்வினையும் ஏன் தந்தாய்
நான் பார்த்த இடம் தானே
இங்கேயே இருக்கிறதே
நான் போகும் போதெல்லாம்
எங்கேயோ மறைந்தாயே
விளையாட்டு பொருளாக
உனை நானும் பார்த்தேனே
மற்றவரோ பக்தியுடன்
உனை பயந்து பார்த்தாரே
விளையாடத் தான் வந்தாய்
விளையாட வைத்தாயே
மறைபொருளாய் ஏன் ஆனாய்
மறந்தாயோ எனைத் தானே
உருகி உன்னை அழைத்தவரோ
காத்துத் தான் நிற்கின்றார்
உனை முதலில் நினைத்ததுமே
காற்றினிலே வந்தாயே
கால் பார்த்து நின்றேனே
கை பார்த்து அசைந்தேனே
கண் பார்த்து கரைந்தேனே
குரல் கேட்டு அழுதேனே
எல்லாமே நீயாக
பார்க்கத்தான் நினைக்கின்றேன்
எல்லாமே நீயாக
தெரியும் நாள் எந்நாளோ
எங்கே நான் தேடிடுவேன்
எப்படி நான் தேடிடுவேன்
என்னுள்ளே தேடுகிறேன்
என் வெளியில் இருப்பாயோ
உனை நானும் சரணடைந்தால்
ஓடோடி வருவாயோ
உனைத் தேடி அலைகின்றேன்
உனைத் தேடி தொலைகின்றேன்
உன் அன்பு உண்மையென்றால்
எனைத் தேடி தருவாயோ
என் காலில் நிலைக்கின்றேன்
உன் விருப்பம் வந்தால் வா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக