கவிதை வழிந்த காகிதம்
காதல் மொழிந்த கவிதை
மனம் எழுந்த காதல்
மாலை விழுந்த மனம்
உடன் கழிந்த மாலை
கண்ணில் காட்டிய காதல்
கண்ணில் தெரிந்த நான்
கண்ணாடி காட்டாத மெருகு
கண்ணாடி பார்க்காத முருகு
கண்சாய்ப்பு பார்த்த நினைவு
தேடல் எல்லாம் நின்றது
ஊடல் சுகமாய் நின்றது
கூடல் மனதில் நின்றது
சாடல் சுற்றி நின்றது
வாடல் பிரிவில் நின்றது
கடன் நம்மை பிரித்ததே
கடல் நம்மை பிரித்ததே
பணம் நம்மை பிரித்ததே
வேலை நம்மை பிரித்ததே
விதி நம்மை பிரித்ததே
இரவு முழுதும் தூக்கமில்லை
போர்வை வாசம் இழக்கவில்லை
பகலில் கூட எழுவதில்லை
நட்பு இப்போ பழக்கமில்லை
அன்னை ஊட்டல் ருசிக்கவில்லை
நித்தம் கையில் காகிதம்
வரமாய் வந்த காகிதம்
வியர்வை பட்ட காகிதம்
கண்ணீர் விழுந்த காகிதம்
காதல் மொழிந்த காகிதம்

1 கருத்து:
முகநூல் குழு, தமிழ்க்குடில் நடத்திய (மேலே இருக்கும்) படம் பார்த்து கவிதை எழுதும் போட்டிக்கு எழுதியது.
உணர்வு வராமல் வார்த்தை கோர்த்து எழுதியது.
கருத்துரையிடுக