ஏன் உன் மௌனத்தை அழைத்தே கெடுத்தேன்
ஏன் உன்னிடம் எதையாவது கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் நீ செய்ய பட்டியல் போட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் நீ செய்யாதவற்றிற்கு ஏமாந்து அழுதேன்
ஏன் நீ காட்டிய பாதையில் செல்லாமல் இருந்தேன்
ஏன் எனக்கு நீ கற்றுத் தந்தவற்றை மறந்தேன்
ஏன் எனக்கு நீ நிகழ்த்திய அற்புதங்களை மறந்தேன்
ஏன் எனக்கு நீ தந்த வாழ்க்கையை மறந்தேன்
ஏன் நான் உன் மீது கோபம் வளர்த்தேன்
ஏன் நான் உன் அண்மை போனதென நினைத்தேன்
ஏன் நான் உன் சொல்கேட்கும் அமைதி இழந்தேன்
என் புண்ணியமோ பாக்கியமோ
என்னை மன்னித்துக் கொண்டேயிருக்கிறாய்
என் நன்றிகளே இனி என் உணர்வுகள்
ஏன் உன்னிடம் எதையாவது கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் உன்னை பார்க்கும் போதெல்லாம் புலம்பினேன்
ஏன் நீ செய்ய பட்டியல் போட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் நீ செய்யாதவற்றிற்கு ஏமாந்து அழுதேன்
ஏன் நீ காட்டிய பாதையில் செல்லாமல் இருந்தேன்
ஏன் எனக்கு நீ கற்றுத் தந்தவற்றை மறந்தேன்
ஏன் எனக்கு நீ நிகழ்த்திய அற்புதங்களை மறந்தேன்
ஏன் எனக்கு நீ தந்த வாழ்க்கையை மறந்தேன்
ஏன் நான் உன் மீது கோபம் வளர்த்தேன்
ஏன் நான் உன் அண்மை போனதென நினைத்தேன்
ஏன் நான் உன் சொல்கேட்கும் அமைதி இழந்தேன்
என் புண்ணியமோ பாக்கியமோ
என்னை மன்னித்துக் கொண்டேயிருக்கிறாய்
என் நன்றிகளே இனி என் உணர்வுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக