குழந்தையாய் இருந்தபோது
குழந்தை போல நடித்துக்கொண்டே
கொஞ்சினர் பெரியவர்கள் அறியாக்காலம்
குழந்தையாய் இருந்தபோது
குழந்தை போல நடித்துக்கொண்டே
கொஞ்சினர் பெரியவர்கள் அறியாக்காலம்
குழந்தையாய் இருந்தபோது
பெரியவன் போல நடக்கச் சொல்லி
குழந்தைத்தனம் கொல்லப் பார்த்த கெட்ட காலம்
பெரியவன் போல நடக்கும் போது
குழந்தை தான் நீயென்று
குறுக்கினர் பெரியவர்கள் பொல்லாக்காலம்
குழந்தைதனம் விட்டுப்போக
பெரியத்தனம் எட்டி நிற்க
பெரியவன் போல் சுற்றியது விடலைக்காலம்
பெரியவன் போல நானும் காட்ட
குழந்தைத்தனம் என ரசித்து
காதல் சொன்னாள் ஒரு குளிர்காலம்
என் குழந்தைத்தனம் ரசிக்கப்பட
அவள் குழந்தைத்தனம் ரசித்தபடி
முன்பனியில் சுற்றியது காதல் காலம்
குழந்தை போல நடக்காதே
சூழல் நம்மை பிரிக்குதென்றாள்
காரணம் விளங்காத விடியற்காலம்
இந்தத்தனம் சிறந்ததென அந்தத்தனம் சிறந்ததென
இந்தக்கண வாழ்வறியா பலரும் சொல்ல
சுயம்புவாக குழந்தைத்தனம் கொண்டதொரு ஞானக்காலம்
(தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - விரும்பிய தலைப்பிற்கு எழுதியது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக