எத்தனை நாள் யோசித்திருந்தேன் ...
இத்தனை சுலபம் என அறியாது ...
நானும் blog எழுதுறேன் ...
மனதில் தோன்றியதை எழுதி ஒரு விதமாய் லேபல் ஒட்டி தருவேன்
கழுதை என்று திட்டு வாங்காத தமிழன், தமிழ்நாட்டில் வளர்ந்திருக்க முடியாது. அதனால் நான் மனிதனுக்கும், மிருகத்திற்கும் இடையே காணும் வேற்றுமை ஒற்றுமைகளை, கழுதையையும் என்னையும் ஒப்பிட்டு எழுதுவேன்.
Punctuation marks எதுவும் எந்த போஸ்டிலும் இருக்காது. அவரவர் தமிழறிவிற்கேற்ப குறிகளால் பிரியாத தமிழ் வார்த்தைகளை பலவாறு கோர்த்து விளையாடும் தமிழ்விளையாட்டு கெட்டுவிடும் என நினைக்கிறேன்.
போதனை எதுவும் இருக்காது (மாணவப் பருவத்தில் தோன்றியதைத்தவிர). என் அனுபவங்கள், கேள்விகள், வடுக்கள் போன்றவற்றை என்காட்டுத்தமிழ்தேன் தடவி பகிர்ந்து கொள்வேன். நீங்களும் தயவு செய்து உங்கள் பதில்களையும், எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்து தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது...
தமிழ் அதுவாய் வாழும்
முடிந்தால் தமிழால் வாழ்வோம்
1 கருத்து:
இயல்பான முன்னுரை.. இதுவே அனைவரையும் ஈர்க்கும் அளவில் எழுதி இருக்கிறீர்கள்.. உங்கள் படைப்புகளை பார்த்து.. படித்து.. ரசிக்க இருக்கிறேன்.
புகுந்து விளையாட கடவீர்! வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக