அன்புள்ள
மென்மையான இரக்கமற்றோரே
பிரியமுள்ள எதிரிகளே எனை
வெறுத்தொதுக்கும் நண்பர்களே
நான்
அனிச்சம் போன்றவன்
விருந்தினனாக இருக்கையில் மட்டுமல்ல
விருநதளிக்கையிலும் தன்
என்னிதய மலரை சிலர்
கொள்ளிகட்டையால் போசுக்குகின்றனர்
கொடுமைக்காரர்கள்
ஆனால்
நீங்கள் மென்மையானவராயிற்றே
அதனால் தான்
மணம் வீசும் ஊதுபத்தி
முனைகொண்டு முத்தமிடுகின்றீர்
நான் செல்லும் பாதை
காட்டுப்பாதை
பலர் என்பாதை முட்களை
கண்டும் காணாது போகின்றனர்
ஆனால்
நீங்கள் என் பிரியமுள்ளவராயிற்றே
அதனால் தான்
ரோஜா செடிஎடுத்து
மலரை பறித்துவிட்டு
மீதியை பாதையில் வீசுகின்றீர்
நான் போரிடும் களத்தில்
பலர் முன்னின்று குத்துகின்றனர்
வீர எதிரிகள்
ஆனால்
நீங்கள் என் நண்பராயிற்றே
அதனால் தான்
என்மார்பு வலிக்குமென்று
பின்னின்று குத்துகின்றீர்
நீங்கள் தந்த அனுபவங்களுக்கு
நன்றிகள் பலகோடி
2 கருத்துகள்:
வலியை மறக்கும் வழி உங்களுக்கு தெரிந்திருக்கிறது
நீங்க படிச்சு யோசிச்சிங்களா - இல்ல
யோசிச்சு படிசிங்கலானு தெரியல - ஆனா
எனக்கு எதுவும் புரியல .
---- கடவுள் .
கருத்துரையிடுக